சேலத்தில் மருந்து கட்டுப்பாட்டுத்துறையின் விதிகளை மீறி செயல்பட்டதாக நான்கு மருந்து கடைகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சேலம் மாநகரம், ஆத்தூர், ஓமலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருந்து கடைகளில் மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் திடீர் ஆய்வு நடத்தினர். இதில், நான்கு மருந்து கடைகளில் மருந்தாளுநர் இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்தது, 'பில்' போடாமல் விற்பனை செய்தது, மருத்துவர் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை செய்தது என விதிகளை மீறி செயல்பட்டுவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அந்த நான்கு மருந்து கடை உரிமையாளர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணைக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் கூறினர்.
ஆத்தூரில் விதிகளை மீறி செயல்பட்டுவந்த இரண்டு மருந்து கடைகள் மீது ஏற்கனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்த வழக்கை விசாரித்த ஆத்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம், சம்பந்தப்பட்ட இரண்டு மருந்து கடை உரிமையாளர்களுக்கும் தலா 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தது.
மருந்து கட்டுப்பாட்டுத்துறையின் அதிரடி நடவடிக்கையால் மருந்து கடைக்காரர்கள் கலக்கமடைந்துள்ளனர்.