!['Bus travel is a not a world record' - OPS Review!](http://image.nakkheeran.in/cdn/farfuture/peucnBk3_L80Tp6xXDL-7D7g_Aa-Awrh1KORxRVvH1c/1651932863/sites/default/files/inline-images/westrwe5.jpg)
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, திமுகவினர் அதனை கொண்டாடி வருகின்றனர். சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி உள்ளிட்ட முக்கிய 6 திட்டங்களை அறிவித்திருந்தார். மேலும் பேரவையில் பேசிய ஸ்டாலின், ''29C பேருந்தில் பயணித்துத்தான் நான் பள்ளிக்குச் சென்றேன்; அந்த வழித்தடப் பேருந்தில் இன்று நான் ஆய்வு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. 29C பேருந்தில் இன்று பொதுமக்களுடன் பயணம் செய்து அவர்களுடன் கலந்துரையாடினேன்'' என மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தஞ்சை களிமேட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், ''முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுடன் பேருந்தில் செல்வது என்பது உலக மகா சாதனையல்ல. திமுகவின் ஓராண்டு ஆட்சி தோல்வியடைந்துள்ளது'' என்று விமர்சித்தார்.