Skip to main content

சொந்த ஊரில் ராணுவ வீரர் இளையராஜா உடல்!

Published on 14/08/2017 | Edited on 14/08/2017
சொந்த ஊரில் ராணுவ வீரர் இளையராஜா உடல்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் மற்றும் தமிழர் உட்பட 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

சோபியான் மாவட்டம், அவ்நீரா கிராமத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்புப் படை வீரர்கள் சனிக்கிழமை மாலை அந்த கிராமத்தை சுற்றி வளைத்தனர்.

அப்போது ஒரு வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதையடுத்து வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இதில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 2 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலில் உயிரிழந்த வீரர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த பி.இளையராஜா என்றும் மற்றொருவர் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.

தவீரவாதிகள் தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் இளையராஜா சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை அடுத்த கண்டனியைச் சேர்ந்தவர்.  இதையடுத்து இளையராஜா உடல் இன்று சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது. இளையராஜா உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்