தடுப்பணை கட்டாத தமிழக அரசை கண்டித்து 20 கிராமங்களில் கருப்பு கொடியேற்றம்!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த காட்டுமன்னார்கோயில் அருகே எய்யலூர் கொள்ளிடம் ஆற்றில் மா.ஆதனூர் - குமாரமங்கலம் இடையே கதவணையும் உடன் தடுப்பணை கட்ட கோரி இப்பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தோர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதே சமயம் கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து இப்பகுதியிலுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுதந்திர தினத்தை புறக்கணித்துள்ளனர். அதன்படி எய்யலூர் மற்றும் சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடுகளில் கருப்பு கொடியேற்றியுள்ளனர்.
- சுந்தரபாண்டியன், அ.காளிதாஸ்