Skip to main content

நெல்லையில் பாஜக ஆர்ப்பாட்டத்தால் பதற்றம்...

Published on 27/09/2018 | Edited on 27/09/2018

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலையை கரைப்பதற்காக குண்டாறு பகுதிக்கு ஊர்வலமாக எடுத்து சென்றனர் அப்போது இந்து அமைப்பினருக்கும் மற்றோரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதன்பின் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பின்னர் சிலைகள் கொண்டுபோய் கரைக்கப்பட்டன. 

 

bjp

 

இந்த சம்பவத்தில் இரண்டு தரப்புகள் மீதும் வீடியோ ஆதரப்படி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.மேலும் அந்த  வீடியோ ஆதரத்தை வைத்து போலீசார் இரண்டு தரப்பிலும் மோதலுக்கு காரணமானவர்களை கைது செய்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியதால் மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவை பிறப்பித்தார். 

 

 

அந்த தடை உத்தரவு இப்போது வரையிலும் நடைமுறையில் உள்ளது. இந்த சூழலில் இன்று பாஜகவினர் மோதலை கண்டித்து செங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக இருந்தது. அதற்கு தலைமை ஏற்க தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வருவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர். முதலில் தமிழிசை தூத்துக்குடி விமானம் மூலம் வருவதாக இருந்ததால் அங்கும் பாதுகாப்பு போடப்பட்டது.

 

bjp

 

தென்காசி மற்றும் செங்கோட்டை பகுதிக்குள் அவர் வந்தால் 144 தடை உத்தரவு இருப்பதால் அவரை வழிமறிப்பதாகவும் போலீசாரிடம் திட்டம் இருந்தது. இந்தநிலையில் தமிழிசை மதுரைக்கு விமானம் மூலம் வந்து அங்கிருந்து காரில் நெல்லை வந்தார். நெல்லையிலிருந்து செங்கோட்டைக்கு வந்தார். வழியில் அவரை மறிப்பதற்காக போலீசார் ஆலங்குளம் நகரில் இன்று காலைமுதல் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டார்கள்.

 

bjp

 

அதன்பின் தென்காசி செல்லும் வழியில் உள்ள ஆலங்குளத்தில் தமிழிசையை போலீசார் மறித்தார்கள். அவரிடம் அங்கு 144 தடை உத்தரவு அமலில் இருப்பதை எடுத்து சொன்னார்கள். இதனை அடுத்து பாஜகவினர் ஆலங்குளத்திலேயே இன்று மதியத்திற்கு மேல் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் தமிழிசை சவுந்தரராஜன் முன்னிலை வகித்தார். பாஜக மாவட்ட செயலாளர் குமரேச சீனிவாசன், முருகானந்தம் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ நைனார் நாகேந்திரன் போன்ற பாஜகவினர் திரளாக கலந்துகொண்டனர். ஆர்பாட்டத்தின் பொழுது இந்து அமைப்பினர் மீது போடப்பட்ட வழக்குகளை விளக்கிக்கொள்ளும்படி கோஷமிட்டார்கள்.

 

சார்ந்த செய்திகள்