Skip to main content

பிச்சாவரம் வன சரகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு! 

Published on 29/01/2022 | Edited on 29/01/2022

 

Birds Survey in Pichavaram Forest Reserve!

 

சிதம்பரம் அருகே பிச்சாவரம் வனசரகத்தில் கடலூர் மாவட்ட வனக்கோட்டம் சார்பில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் 28 மற்றும் 29 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றன. 

 

அதன்படி முதல் நாளான நேற்று (28ஆம் தேதி) பறவை ஆர்வலர்கள் குழுக் கூட்டம், பிச்சாவரம் வன சரகத்தில் நடைபெற்றது. அதில் மாவட்ட வன அலுவலர் செல்வம் தலைமை தாங்கினார். கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர், பேராசிரியர்கள் மற்றும் ஆர்வமுள்ள மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் பறவைகள் கணக்கெடுப்பு வழிமுறைகள் மற்றும் படிவங்கள் குறித்து பறவை ஆர்வலர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. 

 

இதனைத் தொடர்ந்து இன்று (29ஆம் தேதி) அதிகாலை வனத்துறையினர் மற்றும் பறவை ஆர்வலர்கள் படகு மூலம் பிச்சாவரம் வனப்பகுதிக்கு சென்று தொலை நுண்ணோக்கி மற்றும் புகைப்படக்கருவி உள்ளிட்டவைகளை பயன்படுத்தி பறவைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தினார்கள். அதில் வெளிநாட்டு பறவைகள் உள்நாட்டு பறவைகள் மற்றும் பருவ மாற்றத்திற்காக வந்து செல்லும் பறவைகள் உள்ளிட்டவை குறித்து கணக்கெடுப்பு செய்து குறித்துக் கொண்டனர். இந்தக் கணக்கெடுப்பில் 30க்கும் மேற்பட்ட வகைகளான பறவைகள் பிச்சாவரம் வனப்பகுதியில் இருப்பது கண்டறியப்பட்டது. இதில் 10க்கும் மேற்பட்ட வகைகள் வெளிநாட்டு பறவைகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இந்நிகழ்ச்சியில் பிச்சாவரம் வன அலுவலர் கமலக்கண்ணன், வனவர் அருள்தாஸ், வனக் காப்பாளர்கள் ராஜேஷ்குமார் சரண்யா, செல்வம் உள்ளிட்ட வன ஊழியர்கள் கடல் வாழ் உயிரின பறவை ஆர்வலர் மாணவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்