மகாகவி பாரதியாரின் 139- வது பிறந்தநாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் பாண்டியராஜன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், "சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்டத்தோடு, பெண் விடுதலைக்கும் குரல் கொடுத்தவர் பாரதியார். கமல்ஹாசனின் சுற்றுப்பயணம் அரசியலில் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. தன் உயிரை பொருட்படுத்தாமல், மக்களோடு மக்களாக இருப்பவரே தலைவர்.
சட்டமன்ற தேர்தலில் பெண்களுக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கப்படும். பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டுக்கு உத்தரவிட்டது ஜெயலலிதா ஆட்சி தான். முழுமையான மதிப்பீடு செய்துள்ளதால் சேதமடைந்த அனைத்து சாலைகளும் விரைவில் சீரமைக்கப்படும்." என்றார்.