லஞ்சம் கொடுக்க மறுத்த அப்பாவிகளுக்கு அடி உதை; அரசு மருத்துவமனை அவலம்
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் லஞ்சம் கொடுக்க மறுத்த தம்பதியை அங்கிருந்த காவலாளிகள் ஒன்று சேர்ந்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூரைச் சேர்ந்த இளங்கோவன், ஜான்சி தம்பதியினர் தங்களது குழந்தையை காய்ச்சல் காரணமாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். மருத்துவமனையில் சற்று நேரம் கூடுதலாக தங்குவதற்கு காவலாளிகள் தம்பதியினரிடம் லஞ்சம் கேட்டுள்ளனர்.
இளங்கோவன் லஞ்சம் கொடுக்க மறுத்ததை அடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளங்கோவனை காவலாளிகள் ஒன்று சேர்ந்து தாக்கியுள்ளனர். இதைப்பார்த்த அங்கு சிகிச்சைக்கு வந்த பலரும் இளங்கோவனை தாக்கிய காவலாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
க.செல்வகுமார்.