Published on 23/08/2021 | Edited on 23/08/2021
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் எடுக்கும் மதிப்பெண்கள் கணக்கீடு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு கல்லூரிகள் ஒதுக்கப்படும். இந்நிலையில், தற்போது அதனை மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கணக்கு மற்றும் இயற்பியல் பாடங்களில் எடுக்கும் மதிப்பெண்களே பொறியியல் சேர்க்கைக்குப் போதுமானது என்று அறிவித்துள்ளது. இதனால் வேதியியல் பாடத்தில் எடுக்கும் மதிப்பெண் பொறியியல் சேர்க்கைக்கு கணக்கில் எடுத்துக்கொள்ள வாய்ப்பில்லை என்ற நிலை உருவாகியுள்ளது.