Published on 16/12/2021 | Edited on 16/12/2021

மத்திய அரசு, லாபத்தில் இயங்கிவரும் பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்கு தாரை வார்க்க முடிவுசெய்து நடப்பு குளிர்கால கூட்டத் தொடரிலேயே இதற்கான மசோதா நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதைக் கண்டித்து வங்கி ஊழியர் சங்கத்தினர் நாடு முழுவதும் 2 நாள் பொது வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். திருச்சி பாரத ஸ்டேட் வங்கி தலைமை அலுவலகம் முன்பு இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் மற்றும் வங்கி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சி மாவட்டத்தில் 3000 வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலை நிறுத்த போராட்டத்தால் 200 கோடி வர்த்தகம் பாதிப்படைந்துள்ளதாக கூறப்படுகிறது.