Skip to main content

ராமேஸ்வரம், பாம்பனில் நாளை மீன்பிடிக்க தடை!

Published on 05/08/2022 | Edited on 05/08/2022

 

Ban on fishing tomorrow in Rameswaram, Pampan!

 

தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் மழைப்பொழிவு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கன்னியாகுமரி, நீலகிரி உள்ளிட்ட இடங்களுக்கு நேற்று அரக்கோணத்திலிருந்து பேரிடர் மீட்புப் படையினர் சென்றுள்ளனர். இந்நிலையில் ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் விசைப்படகுகளில் நாளை மீன்பிடிக்க தமிழக மீன்வளத்துறை தடைவிதித்துள்ளது.

 

இதுகுறித்து மீன்வளத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,  'நாளை கடலில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ள நிலையில் நாளை ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் விசைப்படகுகளில் மீன்பிடிக்க டோக்கன் வழங்கப்பட மாட்டாது. விசைப்படகுகள் மட்டுமல்லாது நாட்டுப் படகுகளிலும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம்' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்