Skip to main content

லாரி டிரைவரை தாக்கி லாரியுடன் ரூ.70 லட்சம் மதிப்பிலான சரக்குகள் கடத்தல்!

Published on 17/09/2017 | Edited on 17/09/2017
லாரி டிரைவரை தாக்கி லாரியுடன் ரூ.70 லட்சம் மதிப்பிலான சரக்குகள் கடத்தல்!
                      
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அடுத்துள்ள டேல்கேட் அருகே லாரி ஓ்ட்டுனரை அடித்து கட்டிப்போட்டு ரூ.70 லட்சம் மதிப்புள்ள அப்போலா லாரி டயர் லோடை லாரியுடன் 5பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றுள்ளனர்.

லாரி டிரைவர் தியான்சிங்கின் கை, கால்களை கட்டி போட்டு தர்மபுரி அடுத்துள்ள சோகத்தூர் மெயின் ரோட்டில் முட்புதரில் வீசி சென்றுள்ளனர். இதையடுத்து இன்று அதிகாலை அந்த வழியில் நடைபயிற்சி சென்றவர்கள் பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவே தியான்சிங்-கை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்த்து சிகிச்சை அளித்து மருத்துவம் பார்த்து வருகின்றனர்.

டிரைவர் தியான்சிங்-கிடம் தனிப்படை காவலர்கள் விசாரணை மேற்கொண்டபோது., எங்கள் நிறுவனத்தின் மூலம் ரூ.70லட்சம் மதிப்புள்ள அப்போலா டயர்ஸ் கேரள மாநிலம் கொச்சினில் இருந்து குஜராத் கொண்டு செல்ல ஒப்பந்தம் செய்து கொண்டு செல்கிறோம். இன்று அதிகாலை 5 மணிக்கு தொப்பூர் டேல்கேட் தாண்டி வந்ததும் 5பேர் கொண்ட கும்பல் காரில் வந்து என்னை பிடித்து கை, கால்களை கட்டிபோட்டு லாரியுடன் டயரை கடத்திவிட்டனர். பிறகு ஒரு முட்புதரில் தன்னை வீசிவிட்டு சென்றுவிட்தாக அவர் கூறியுள்ளார்.

- எம்.வடிவேல்

சார்ந்த செய்திகள்