திருவனந்தபுரத்தில் அருண் ஜெட்லி
கடந்த மாதம் 27-ம் தேதி வெட்டிக் கொல்லப்பட்ட ஸ்ரீகாரியம் ஆா்.எஸ்.எஸ் பிரமுகா் ராஜேஷின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல மத்திய நிதி மற்றும் பாதுகாப்பு துறை மந்திரியான அருண்ஜெட்லி இன்று திருவனந்தபுரம் வந்தார்.
கேரளாவில் மா.கம்யூ பினராய் விஜயன் தலைமையிலான ஆட்சி பதவியேற்று 13 மாதங்கள் முடிவடைந்த நிலையில் அந்த 13 மாதங்களில் பாஜக மற்றும் ஆா்.எஸ்.எஸ் அமைப்பை சோ்ந்த 14 போ் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதே போல் மா.கம்யூனிஸ்ட் மற்றும் எஸ்.எப்.ஐ யை சோ்ந்த 10 போ் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் அங்கு அரசியல் கொலை என்பது தொடா்ந்து நடந்து கொண்டு வருகிறது. இதில் கடைசியாக அரசியல் கொலைக்கு பலியானவா் ஆா்.எஸ்.எஸ்.ஐ சார்ந்த ராஜேஷ். தலைநகரத்தில் நடந்த இந்த கொலை கேரளா மட்டுமல்ல பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது.
இந்த நிலையில் இந்த தொடா் அரசியல் கொலைக்கு முற்றுப்புள்ளி வைக்க முதல்வா் பினராய் விஜயன் இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் கொல்லப்பட்ட ராஜேஷின் வீட்டிற்கு இன்று நேரில் சென்று ராஜேஷின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு அருண் ஜெட்லி ஆறுதல் கூறுகிறார்.
இதற்காக 12.30மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு வந்தார் அருண் ஜெட்லி. அவரை விமான நிலையத்தில் பாஜக மாநிலத்தலைவா் கும்மணம் ராஜசேகா் திருவனந்தபுரம் மாவட்ட தலைவா் சுரேஷ் மற்றும் தமிழகத்தை சோ்ந்த ஹெச்.ராஜா உள்ளிட்டோர் வரவேற்றனா்.
மணிகண்டன்