கவர்னர் வருகையினால் அவசர கோலத்தில் பணிகள்;
மக்களின் வரிப்பணம் வீணடிக்கும் அரசுக்கு பொதுமக்கள் கண்டனம்
கடலூருக்கு தமிழக கவர்னர் 14ம் தேதி இரவு வருகிறார். பின்னர் மறுநாள் அரசு அதிகாரிகளுடன் மாவட்டத்தில் நடைபெறும் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்த இருக்கிறார். இதற்கு கடலூர் மாவட்டத்தில் திமுக, மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் மாநில சுயஆட்சியில் தலையிடுவதை எதிர்த்து கவர்னர் வருகைக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பை தெரிவிக்கவுள்ளனர்.
இந்த நிலையில் கவர்னர் வருகைகாக கடலூர் நகரத்தில் உள்ள முக்கிய சாலைகளை அவசர கோலத்தில் புதிய சாலை அமைத்தல், சாலை சீரமைப்பு, சாலை தடுப்புகளுக்கு வர்ணம் பூசுதல் என விருவிருப்பாக செய்து வருகிறார்கள். இப்படி அவரகோலத்தில் செய்யும் பணிகள் எத்தனை நாள் வருமோ என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்பியுள்ளனர். இதனால் கோடிகணக்கில் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
- காளிதாஸ்