Published on 08/12/2018 | Edited on 08/12/2018

தமிழகத்தில் கடந்த மாதம் 15 மற்றும் 16ம் தேதிகளில் வீசிய கஜா புயலால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்தது.
அதனையொட்டி அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கடந்த நவம்பர் 22, 23, 24ம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் இம்மாதம் 18 ,19 ,20ம் தேதிகளில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.