அண்மையில் நடந்து முடிந்த விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிகப்படியான இடங்களில் வெற்றிபெற்றிருந்தது. அதனையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நகராட்சி, பேரூராட்சி தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகம் திமுகவில் வரும் நவ. 21ஆம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்ப மனுக்களை அந்தந்த மாவட்டத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உறுப்பினர் பதவிக்கு 10,000 ரூபாயும், பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு 2,500 ரூபாயும் விருப்ப மனு கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது. திமுகவின் இந்த விருப்ப மனு விநியோக அறிவிப்பால் விரைவில் நகராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அமமுகவும் விருப்பமனுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் நவ. 24ஆம் தேதிமுதல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்பமனு விநியோகிக்கப்படும் என அமமுகவின் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.