Published on 04/01/2021 | Edited on 04/01/2021

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 14ஆம் தேதி மீண்டும் சென்னை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த மாதம் தமிழகம் வந்து தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் அரசு விழாவில் பாஜகவுடனான அதிமுக கூட்டணி தொடரும் என்று முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகிய இருவரும் அமித்ஷா முன்னிலையில் கூட்டாக அறிவித்து கூட்டணியை உறுதிப்படுத்தினார்கள். ஆனால் இதுதொடர்பாக அவர் ஏதுவும் கருத்து கூறவில்லை. மேலும் பாஜக முன்னணி தலைவர்கள் முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை ஏற்க மறுத்து வருகிறார்கள். இந்நிலையில் வரும் 14ம் தேதி ‘துக்ளக்’ ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக அமித்ஷா தமிழகம் வர இருக்கிறார். அவர் ரஜினியைச் சந்தித்து பேச வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.