இன்று சமூகவலைதளமான வாட்ஸ் அப்பில் ஒரு ஆடியோ வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் "நான் கேகே.போஸ் பேசுகிறேன் என்னிடமிருந்து 70 லட்சம் வாங்கிக்கொண்டு டாஸ்மாக் கடை மற்றும் பார் வைப்பதற்காக கொடுத்துள்ளேன். முதலில் 25 லட்சம் மேலும் அம்மா வாங்க சொன்னாங்க அம்மா சொல்லித்தான் நான் பணம் கேட்கிறேன் அப்படி என்று எங்கள் தலைவி பெயரை சொன்னதால் நம்பி கொடுத்தேன். இதுவரை கொடுத்து எட்டு வருடங்கள் ஆகிவிட்டது. இதுவரை ஒரு ரூபாய் கூட திரும்பி வரவில்லை. எவ்வளவோ முறை அவரிடம் கேட்டு முறையிட்டும் அழுதும் பார்த்துவிட்டேன்.
அதற்கு அவர் தற்போது என்னை கேட்க யாருமில்லை என்று மிரட்டுகிறார். உன்னால் ஒன்றும் செய்யமுடியாது என்றார். நானும் பொறுத்து பொறுத்து பார்த்தேன் அதனால் எங்களது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்க்கும், எங்கள் முதல்வர் எடப்பாடிக்கும் வேண்டுகோள்விட்டு புகார் கொடுத்துள்ளேன். இவர் ஏற்கனவே பகுதி செயலாளர் பால்பாண்டி, அடுத்து மண்டல தலைவர் ராஜபாண்டியின் உயிரை குடித்தவர் என்று பகிரங்கமாக அமைச்சர் செல்லூர் ராஜூ மீது கொலை பழி குற்றம்சாட்டுவது ஆளும் அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கே.கே .போஸிடம் கேட்டோம், பெரும் பதவியில் அமைச்சராக இருந்துகொண்டு கட்சியில் பலபேரை பலிகொண்டு கட்சியில் பலபேரை பலி வாங்கியிருக்கிறார். என் தந்தை கருப்பையா கமுதி அதிமுக மாவட்ட ஒன்றிய செயலாளர். தலைவர் காலத்திலிருந்து இருந்தவர். குடும்பமே கட்சி குடும்பம். நான் தெற்கு மாவட்ட கழக பொருளாளராக உள்ளேன். அப்படி உள்ள என்னையே மிரட்டுகிறார். என்னைப்போல் ஏராளமான கட்சித் தொண்டர்கள் இவரால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தற்போது தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் அமைச்சர் உதயகுமார் பக்கம் இருப்பதால் தெற்கு தொகுதியில் கண்டுகொள்வதில்லை. நானும் தெற்கு தொகுதி என்பதால் என்னையும் புறக்கணிக்கிறார். பகுதியில் உள்ள வார்டுகளை மாற்றி 16-இல் 13-வார்டு பெண்களாக மாற்றியிருக்கிறார். கட்சிக்குள்ளேயே பலபேர் கோபத்துடன் கேட்கின்றனர். இவர் பணத்தை வைத்தே அனைத்தையும் வாங்கிவிடலாம், அதிகாரத்தை வைத்தே அனைத்தையும் மிரட்டி தன் வழிக்கு கொண்டு வந்து விடலாம் விடலாம் என்று காலம் காலமாக பல பேரை பலிவாங்கிதான் இந்த பொறுப்பில் தொடர்ச்சியாக இருக்கிறார்.
பசுத்தோல் போர்த்திய புலியை கட்டாயம் முதல்வரும், ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸும் இனங்கண்டு கட்சியைவிட்டு அவரை நீக்க வேண்டும். எனது பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் இல்லை என்றால் மனம் உடைந்து இருக்கிறேன் இது கட்சிக்கு அவமானம் என்பதால் பொறுத்துக் கொண்டு இருக்கிறேன். தயவு செய்து என்னை காப்பாற்றுங்கள், குடும்பத்தை காப்பாற்றுங்கள் என்று அழுது கொண்டே கூறினார் கே .கே.போஸ். அமைச்சர் மீது குற்றச்சாட்டு எழுப்பியுள்ள ஆடியோ வெளியாகி தற்போது கட்சி வட்டாரத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.