சிதம்பரத்தை அடுத்த சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் 400 படுக்கைகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக கரோனா சிகிச்சை மையத்தை புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து வட்டார மருத்துவ அலுவலர் அமுதா பெருமாளிடம் கேட்டறிந்தனர்.
அப்போது, சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளித்திடவும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்திடவும் வேண்டும் என மருத்துவரிடம் கேட்டுக் கொண்டார்கள். உள்நோயாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளவர்களுக்கு ஹார்லிக்ஸ், பழங்கள், பிஸ்கட், பிரட், பேரீச்சம்பழம், குடிநீர், சானிடைசர் உள்ளிட்ட பொருட்களைச் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.அருண்மொழித்தேவன், கே.ஏ.பாண்டியன் ஆகியோர் வட்டார மருத்துவ அலுவலரிடம் வழங்கினார்கள். இந்த நிகழ்வின் போது மாவட்டக் கழக அவைத் தலைவர் எம்.எஸ்.என். குமார், சேத்தியாதோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவருமான பாலசுந்தரம், மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், நிர்வாகிகள் உடன் இருந்தனர்.