Skip to main content

தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய அதிமுக எம்.எல்.ஏ. சரோஜாவின் மனு தள்ளுபடி!

Published on 07/12/2017 | Edited on 07/12/2017
தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய அதிமுக எம்.எல்.ஏ. சரோஜாவின் மனு தள்ளுபடி!

ராசிபுரம் தொகுதியில் பெற்ற வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்க கோரி அமைச்சர் சரோஜா தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மே 16ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ராசிபுரம் தொகுதியில், அதிமுக வி.சரோஜா, திமுக துணை பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, பிஜேபி சி.குப்புசாமி, விடுதலை சிறுத்தைகள் ஜி.அர்ஜுன் உள்ளிட்ட 12 பேர் போட்டியிட்டனர். அதிமுக சரோஜா 86901 வாக்குகளும், திமுக துரைசாமி 77270 வாக்குகளும் பெற்றதையடுத்து, 9631 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சரோஜா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதன்பின்னர், பணபட்டுவாடா மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்து சரோஜா பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி வி.பி.துரைசாமி தொடர்ந்த தேர்தல் வழக்கு நீதிபதி வி.பாரதிதாசன் முன்னிலையில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், தனது வெற்றி நியாயமானது என்பதால் தனக்கெதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக்கோரி அமைச்சர் சரோஜா மனுத்தாக்கல் செய்தார்.

அமைச்சர் சரோஜா மனுவை இன்று தள்ளுபடி செய்த நீதிபதி, தேர்தல் வழக்கு குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

- சி.ஜீவா பாரதி 

சார்ந்த செய்திகள்