Skip to main content

வேலை வாங்கித் தருவதாக பண மோசடி... தேடப்பட்டு வந்த அதிமுக பிரமுகர் கைது!

Published on 25/12/2021 | Edited on 26/12/2021

 

AIADMK leader arrested for money laundering

 

வேலை வாங்கி தருவதாகக் கூறி ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளரான மணி என்பவரின் கூட்டாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

சேலத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கி தருவதாகச் சேலத்தைச் சேர்ந்த குணசேகரன் என்பவரிடம் 17 லட்சம் ரூபாயை மணியும் அவரது நண்பருமான அதிமுக பிரமுகர் செல்வகுமார் பெற்றதாக புகார் எழுந்தது. இதேபோல் வேலை வாங்கித் தருவதாக இருவரும் பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் மணி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், செல்வகுமாரை இரண்டு மாதமாக போலீசார்  தேடிவந்தனர். இந்நிலையில் இரண்டு மாதம் தலைமறைவாக இருந்த செல்வகுமாரை சேலம் வந்த பொழுது தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்