எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையில், மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் வேளாண் மசோதாக்களை மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.
விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக சட்டம், விலை உத்தரவாத ஒப்பந்தம், விவசாய சேவை சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மசோதாக்கள் மீதான விவாதம் நடைபெற்றது.
இந்த நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசின் புதிய விவசாய மசோதாக்களை பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சிகளே எதிர்க்கின்றன. விவசாய மசோதாக்களை அ.தி.மு.க. உள்ளிட்ட 4 கட்சிகள் மட்டுமே ஆதரிக்கின்றன. சட்டத்திற்கு மக்களவையில் ஆதரவு, மாநிலங்களவையில் எதிர்ப்பு என்பது அ.தி.மு.க.வின் நகைச்சுவை. மசோதாக்கள் கார்ப்பரேட் நிறுவனங்களைப் பாதுகாக்குமே தவிர விவசாயிகளைப் பாதுகாக்காது. விவசாய சட்டங்கள் மாநிலங்களுக்கு உள்ளே நடைபெறும் வர்த்தகத்தையும் கட்டுப்படுத்துகிறது. உழவர் சந்தை, வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அனைத்திற்குமே இந்த சட்டங்கள் ஆபத்தானவை. தமிழகத்தில் ஆட்சியில் நீடிப்பதற்காவே விவசாய மசோதாக்களை அ.தி.மு.க. அதிகரித்துள்ளது." இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.