![lo](http://image.nakkheeran.in/cdn/farfuture/a9nrEu-Q17CdOeyxcTU_Kq9EWe16DdCAomjDYVadRpA/1533347660/sites/default/files/inline-images/love_1.jpg)
விவசாயம், மற்றும் அவை சார்ந்த சார்புத் தொழில்களுக்கு மின் இணைப்புக் கேட்டு பலர் காத்திருக்கின்றனர். நடையாய் நடந்து கால்களும் தேய்ந்து ஓய்ந்து விடுகிறார்கள். அதே போன்று தான் வீடு சார்ந்தவைகளுக்கு மின் இணைப்புக் கேட்டு விண்ணப்பித்த 24 மணி நேரத்திற்குள் மின் இணைப்புத் தரவேண்டும். இது போன்றவைகள் தற்போது கானல் நீராகவே மாறிக் கொண்டிருக்கிறன்றன. மாறாக மின்சாரம் அன்றி வாழ்க்கை இல்லை என்ற சூழல் உருவாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் கலப்புத் திருமணம் செய்தவர்கள் தங்களுக்கான விவசாய மின் இணைப்புக் கேட்டு விண்ணப்பம் செய்தால் உடனடியாக முன்னுரிமை தரப்பட்டு மின் இணைப்பு வழங்கப்படுகிற வசதியினை மின்வாரியம் தற்போது நடை முறைப்படுத்தியிருக்கிறது.
அதற்குத் தேவையான சில ஆவணங்களையும் குறிப்பிட்டிருக்கிறது மின்வாரியம்.
கலப்புத் திருமணம் செய்து கொண்டதற்கான பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் இருவரின் சாதிச் சான்றிதழ்களுக்கான சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடமிருந்து பெற்ற சான்று ஆவணங்கள் மற்றும் நிலத்தில் இருந்து வருகிற வருவாயைக் கொண்டே வாழ்க்கை நடத்துபவர்கள், பொருளாதாரத்தில் பின் தங்கியவர் என்று சம்பந்தப்பட்ட தாலுகா வட்டாட்சியரிடமிருந்து சான்று பெற வேண்டும். அடுத்து விவசாய விண்ணப்பம், அதோடு கிராம நிர்வாக அலுவலர் சான்று, வரை படம், அரசு பட்டா அல்லது பத்திரம், சிட்டா, அடங்கல், தடையில்லாச் சான்று இவைகளோடு மேற்பார்வைப் பொறியாளர் ஊரக மின்மயமாக்கல் மேம்பாடு மற்றும் பகிர்மானம், அலுவலகத்தில், பதிவு செய்த சான்று ஆகியவைகள் இணைக்கப்பட வேண்டும்.
இவைகளனைத்தையும் கொண்ட ஆவணங்களோடு உரிய மாவட்ட மின்வாரிய கண்காணிப்பு பொறியாளரிடம் சமர்ப்பித்து உடனடியாக மின் இணைப்ப பெற வேண்டியும் சொல்லப்பட்டுள்ளது.
இது பெடர்பாக நாம் மின் வாரியத்தின் பகிர்மான அதிகாரிகள் வட்டாரத்தில் பேசியதில், இது போன்ற திட்டங்கள் வெளியே அறியப்படாமலிருந்தன. தற்போது மக்களின் நலன் பொருட்டு முன்னெடுக்கப்படுகிறது என்கிறார்கள்.