60 சதவிகித பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டாலும் அதிலிருந்துதான் கேள்விகள் கேட்கப்படும் என கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
தனது தொகுதியான ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சாவக்கட்டுபாளையம் என்ற பகுதியில் வசித்து வரும் நூற்றுக்கணக்கான கைத்தறி நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் பெற அடையாள அட்டைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, "அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டிற்கு தமிழக கவர்னர் ஒப்புதல் வழங்குவது குறித்து நமது முதல்வர் நடவடிக்கை மேற்கொள்வார். ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங் குறித்து இரண்டு வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளது. கனிணி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கும் சிறப்பாசியர்களுக்கும் வழக்கு முடிந்து கலந்தாய்வு மேற்கொள்ளப்படும். 40 வயதுக்கும் மேல் உள்ள உயர்குடி ஆசிரியர்களுக்கு பணிவாய்ப்பு இல்லை மற்றவர்களுக்கு 45 வயது வரை பணிவாய்ப்பு வழங்கப்படும். தேவையான புத்தங்கள் வழங்கப்பட்டுள்ளது. பாடத்திட்டங்கள் குறைப்பு ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது அதன் அடிப்படையில் 60 சதவிகித பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்துதான் தேர்வுக்கான கேள்விகள் கேட்கப்படும்" என்றார்.