முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கைதை கண்டித்து நாகையில் முன்னாள் வேளாண்துறை அமைச்சர் ஜீவானந்தம் தலைமையில் 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரை நியமிக்காததைக் கண்டித்து சென்னை வள்ளுவர்கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனை கண்டித்து நேற்று நாகையில் முன்னாள் வேளாண்துறை அமைச்சர் ஜீவானந்தம் தலைமையில் அதிமுகவினர் 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் தமிழக அரசை கண்டித்தும் அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.