Published on 29/07/2021 | Edited on 29/07/2021

கரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் கல்வி நிறுவனங்களை திறக்கலாமா? கோவில் விழாக்களில் பக்தர்களை அனுமதிக்கலாமா என்பது தொடர்பாக நாளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தயிருக்கிறார்.
அதேபோல் கரோனா ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை அறிவிக்கலாமா என்பது பற்றியும் மருத்துவத்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மதியம் ஆலோசனை நடத்த இருக்கிறார். பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், மெரினா கடற்கரை போன்ற சுற்றுலாத் தலங்கள் ஆகியவற்றை திறப்பது குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவில் விழாக்கள், அரசியல் நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களுக்கு தளர்வுகள் அளிப்பது குறித்தும் முதல்வர் ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.