சிதம்பரத்தில் ஓட்டுநர்கள் திடீர் ஸ்டிரைக்-6 மணி நேரம்
பேருந்துகள் இயங்காததால் பொதுமக்கள் அவதி
விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழக சிதம்பரம் மணிமனையில் பிரபு என்பவர் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் 11ஆம்தேதி இரவு சிதம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்தை ஓட்டிசெல்கிறார். அப்போது புதுச்சத்திரத்தை அடுத்த பெரியப்பட்டு என்ற இடத்தில் ஒருஇரு சக்கரவாகனத்தில் மூன்று நிலையில்லாமல் பேருந்தை முந்திசென்ற போது இருசக்கர வாகனம் பஸ்மீது உராசியதால் மூன்று பேரும் நிலைதடுமாறி கீழேவிழுந்தனர் இதில் ஒருவர் சம்பவ இடத்திலே உயிர் இழந்தார்.
இறந்தவர் பரங்கிப்பேட்டையை சேர்ந்தவர். இது குறித்து புதுச்சத்திரம் காவல் துறையினர் பேருந்து ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து ஓட்டுனரை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனையறிந்த போக்குவரத்து சிஐடியு, தொமுச உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் சேர்ந்த சங்கங்களின் தலைவர்கள் சம்பந்தபட்ட காவல் நிலையத்துக்கு தவறு யார் மீது உள்ளதோ அவர்கள் மீது வழக்கு போடுங்கள் என்றார்கள். இதற்கு பணியில் இருந்த காவல் துறையினர் சங்கதலைவர்களை அவமதிப்பு செய்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஓட்டுனர்கள் சனிக்கிழமை மதியம் 12 மணியில் இருந்து பேருந்தை இயக்காமல் சிதம்பரம் பணிமனைக்குட்பட்ட அனைத்து பேருந்துகளையும் பணிமனையில் நிறுத்திவிட்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். இதனால் வெளியூர்களுக்கு செல்லும் பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு அடைந்தனர்.
இதுகுறித்து மாலை 6 மணி வரை வருவாய் கோட்டாட்சியர் ராஜேந்திரன், சிதம்பரம் காவல் கோட்ட அதிகாரி நிஷா உள்ளிட்ட வர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் இது குறித்து தீவிர விசாரணை செய்து யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனை ஏற்ற ஓட்டுனர்கள் பேருந்தை இயக்க தொடங்கினார்கள். தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை நாளாக வருவதால் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.
- காளிதாஸ்