Published on 14/03/2024 | Edited on 14/03/2024

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நான்காயிரம் உதவி பேராசிரியர்களுக்கான பணியிடங்களுக்கான தேர்வு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 4ஆம் தேதி தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் இதற்காக விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 569 தமிழ் உதவி பேராசிரியர், 656 ஆங்கில உதவி பேராசிரியர் உட்பட நான்காயிரம் பணியிடங்கள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்பட இருக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.