Skip to main content

அசந்து தூங்கிய குடும்பம்; உள்ளே வந்த மர்ம நபர்கள் -  அடுத்தடுத்து நடந்த பகீர் சம்பவம்!

Published on 05/03/2025 | Edited on 05/03/2025

 

40 sovereigns worth of gold jewellery stolen from butcher  house

கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது பெரிய கொல்லியூர் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள தக்கா பகுதியில் வசிப்பவர் ஜாகிர் உசேன்.கறிக்கடை வியாபாரியான இவர் நேற்று தனது மனைவி மற்றும் குடும்பத்தாருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பின்பக்க மரக் கதவைத் திறந்து உள்ளே வந்த மர்ம நபர்கள், வீட்டில் ஒரு அறையில் இருந்த பீரோவைத் திறந்து அதில் இருந்த 40 சவரன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், மற்றும்  40 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். 

பின்னர் நள்ளிரவு 1 மணியளவில் இயற்கை உபாதையை கழிக்கக் கண் விழித்துப் பார்த்தபோது பீரோ திறந்தும், அதிலிருந்து பொருட்கள் கலைந்து இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்த ஜாகிர் உசேன் உடனடியாக சம்பவம் குறித்து பகண்டை கூட்டுச்சாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பெயரில் அங்கு வந்த போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோதே உள்ளே புகுந்த மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்