தமிழக அரசின் சார்பில் அவ்வப்போது பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதோடு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் 17 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இன்று (04.08.2024) பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள உத்தரவில், “மேற்கு மண்டல ஐஜியாக இருந்த பவானிசுவாய், காவல் தலைமையிட ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழக தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எஸ். அதிகாரியான ஆர். தினகரனுக்கு சிலை கடத்தல் தடுப்பு சி.ஐ.டி. பிரிவு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகர காவல் ஆணையராக ரூபேஷ் குமார் மீனா நியமிக்கபட்டுள்ளார்.
சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் ஆணைய ஐ.ஜி.யாக மகேந்திரகுமார் ரத்தோட் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக இருந்த ராதிகா, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக நியமிக்கபட்டுள்ளார். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த செந்தில்குமாரி சென்னை குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கபட்டுள்ளார். ஐ.பி.எஸ். அதிகாரி மூர்த்தி திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு மண்டல ஐ.ஜி.யாக செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த பவானீஸ்வரி காவல்துறை விரிவாக்கப் பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.