Published on 17/10/2018 | Edited on 17/10/2018

சென்னை தாம்பரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் பெண்கள் பாதுகாப்புக்காக ரவுத்திரம் என்ற மொபைல் செயலி தொடக்க விழா நடந்தது. இந்த செயலியை தொடங்கி வைத்து பேசிய கமல், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அவர்களின் பாதுகாப்புக்காகவே இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.