தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி கடந்த 12-ம் தேதி முதல் 19ம் தேதி வரை வேட்பாளருக்கான மனுத்தாக்கல் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக, திமுக, மனிதநேய மக்கள் கட்சி, நாம் தமிழர், மக்கள் நீதி மையம் மற்றும் சுயேட்சைகள் என 172 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
வேட்புமனு பரிசீலனை கடந்த 20ம் தேதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
முன்னதாக 172 பேரின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், 9 தொகுதிகளிலும் சேர்த்து 13 பேர் மனுவினை வாபஸ் பெற்றுள்ளனர். திருச்சி கிழக்கு தொகுதியில் 18 பேர், திருச்சி மேற்கு தொகுதியில் 13 பேர், ஸ்ரீரங்கம் தொகுதியில் 15 பேர், திருவெறும்பூர் தொகுதியில் 15 பேர், மணப்பாறை 22 பேர், லால்குடி தொகுதியில் 14 பேர், மண்ணச்சநல்லுார் தொகுதியில் 29 பேர், முசிறி தொகுதியில் 20 பேர், துறையூர் தொகுதியில் 13 பேர் என திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 159 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.