ஏபிபி நியூஸ் - சிவோட்டர் இணைந்து நடத்திய கருத்துகணிப்பில் திமுக கூட்டணி 39 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கோவை கவுண்டம்பாளையம் அதிமுக எம்.எல்.ஏ. ஆறுகுட்டி நக்கீரன் இணையதளத்திடம் பேசுகையில்,
கருத்துக் கணிப்புகள் மாறும். அம்மா இருந்தபோது அவர்கள் கை காட்டினால் ஓட்டு விழுந்துவிடும். அம்மா இருந்தபோது செய்த வேலைகளை விட இப்போது நாங்கள் அதிகமாக தொகுதிகளில் இறங்கி வேலைகளை செய்து வருகிறோம். ஒவ்வொரு தொகுதிக்கும் போதுமான நிதிகளை அரசு ஒதுக்குகிறது. கடந்த 7 வருடமாக மக்களை பாதுகாத்து வருகிறோம். கோழி அடை காப்பதுபோல் மக்களை பாதுகாப்பாக கொண்டு செல்கிறோம். அப்படி இருக்குபோது எங்களுக்கு சாதகமாகத்தான் வாக்குகள் வரும். கோவையில் திமுக சுத்தமாக இல்லை. கொங்கு மண்டலத்தில் நிச்சயம் அதிமுக வெற்றி பெறும்.
அதிமுக கூட்டணியில் தேமுதிக, பாமக இடம்பெறுமா? இல்லை அதிமுக தனித்துப் போட்டியிடுமா?
அது தலைமைத்தான் முடிவு செய்யும். சில கட்சிகள் கூட்டணிக்கு வந்தால் சந்தோஷம். வரவில்லையென்றாலும் அதைவிட சந்தோஷம்தான்.
பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்கும் என்கிறார்களே?
அது தலைமைத்தான் முடிவு செய்யும்.
பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால் தொண்டர்கள் மத்தியில் வரவேற்பு இருக்குமா?
அதிமுக தலைமை கூட்டணி குறித்து எந்த முடிவு எடுத்தாலும் தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்கள். எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். இவ்வாறு கூறினார்.