Published on 04/08/2018 | Edited on 04/08/2018

அமைச்சர் ஜெயக்குமார் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியபோது,
’’சிலைக்கடத்தல் வழக்குகளின் விசாரணை திசைமாறி போகக்கூடாது என்பதாலேயே சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. சிலைக் கடத்தல் வழக்குகளில் பல்வேறு மாநிலங்கள், நாடுகளுக்கு தொடர்பு இருக்கலாம். ஆகவே, சிலைக்கடத்தல் வழக்கில் சர்வதேச போலீசின் உதவி தேவைப்படுகிறது. இதன் காரணமாகவும் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.
சிலைக்கடத்தல் விவகாரங்களில் உண்மை வெளிவர வேண்டும் என்பதே அரசின் நோக்கம். சிலைக்கடத்தலில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்’’என்று தெரிவித்தார்.