சிதம்பரத்தில் கடலூர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் கே. ரஜினிகாந்த் தலைமையில், மாநில பொதுச்செயலாளர் வழக்குரைஞர் ஏ.எஸ்.வேல்முருகன் காந்தி மற்றும் காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நகரத் தலைவர் கே.நாகராஜன் வரவேற்றார். மாவட்ட பொதுச்செயலாளர் துரை. சிங்காரவேல், மாவட்ட துணைத்தலைவர் ஆர்.சுப்புலட்சுமி, மாநிலச் செயலாளர் ஆலாதினேஷ், மாவட்ட பொதுச்செயலாளர் குமார் இன்பரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதனைத் தொடர்ந்து சிதம்பரம் புறவழிச்சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட த.மா.கா. புதிய நிர்வாகிகள் பட்டியலை மாவட்ட தலைவர் கே. ரஜினிகாந்த் வழங்கினார். அதனை மாநில பொதுச்செயலாளர் வழக்குரைஞர் ஏ.எஸ்.வேல்முருகன் வெளியிட்டார். இந்நிகழ்ச்சிக்கு மாநில செயற்குழு சிறப்பு அமைப்பாளர் எம்.ஜி. ராஜராஜன், மாநில மகளிரணி துணைத்தலைவி கே. ராஜலட்சுமி, மாவட்டச் செயலாளர் எஸ்.எம். நடராஜ், ஏ. சாந்தி, வட்டார தலைவர்கள் டாக்டர் வீரவேல், வி. குமார், குமராட்சி ஒன்றிய வட்டார தலைவர்கள் செந்தில், வையூர் முத்து, பரங்கிப்பேட்டை இளையபெருமாள், அண்ணாமலை நகர் பேரூராட்சி தலைவர் முரளி ராஜன், பால்ராஜ், மாநில இளைஞரணி என். கணேஷ், மாவட்ட இளைஞரணி துஷ்யந்தன், வீரமனி, புருஷோத்தமன் பாக்யராஜ், வெற்றிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதன் பின்னர் தமாக மாநில பொதுச்செயலாளர் ஏ.எஸ்.வேல்முருகன் செய்தியாளர்களிடையே பேசுகையில், “தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சேர்க்கை முகாமில், ஜி.கே.மூப்பனார், வாசன் ஆகியோர் மீது மக்களிடையே நல்ல பெயரும், நம்பிக்கையும் உள்ளதால் மக்கள் தானாகவே வந்து உறுப்பினராகச் சேருகின்றனர். வருகின்ற சட்டப்பேரவை தேர்தலைச் சந்திக்க த.மா.கா. உத்வேகத்துடன் பல்வேறு முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. மக்களிடையே த.மா.கா. கொள்கைகளை எடுத்துக் கூறி உறுப்பினர் சேர்க்கை நடத்தி வருகிறோம். வலிமையான பாரதம் உருவாக்கும் நோக்கத்தில் கறைபடியாத கரத்திற்குச் சொந்தக்காரராக த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் செயல்பட்டு வருகிறார். எதிர்காலத்தில் த.மா.கா. புதுப்பொலிவுடன் செயல்பட்டு நல்ல பாதையில் செல்லும். வார்டுகள், பூத்கள் வாரியாக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அக்.15ஆம் தேதி உறுப்பினர் சேர்க்கை முடிவடைகிறது” என்றார்.