Published on 19/10/2018 | Edited on 19/10/2018

சென்னை தேமுதிக அலுவலகத்தில் நடைபெற்ற தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், தேமுதிக பொருளாளராக பிரேமலதா தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட செயலாளர்கள் ஒருமனதாக அவரை தேர்ந்தெடுத்தனர். இதுவரை தேமுதிகவின் எந்த பொறுப்பிலும் பிரேமலதா இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.