Skip to main content

ஓபிஎஸ்ஸை புறக்கணிக்கும் எடப்பாடி... ஓபிஎஸ்ஸிற்கு பயத்தை ஏற்படுத்திய சம்பவம்... அதிருப்தியில் முன்னாள் அமைச்சர்!

Published on 11/12/2019 | Edited on 11/12/2019

தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்பை கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு வரையறை பணிகள் முறையாக செய்யவில்லை என்று திமுக தரப்பு உச்சநீதிமன்றம் சென்ற நிலையில், 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் எடப்பாடியால் தான் ஓரங்கட்டப்பட்டு வருவதைத் தடுக்க முடியாமல் ஓ.பி.எஸ். விரக்தி நிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவரை மட்டும் அல்லாது அவரது ஆதரவாளர்களையும் அலட்சியப்படுத்துவதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் எடப்பாடி என்று கூறுகின்றனர்.
 

admk



உதாரணத்திற்கு, ஓ.பி.எஸ்.சின் ஆதரவாளர் கே.பி.முனுசாமியின் பேத்தி நடன அரங்கேற்றம் சென்னையில் சமீபத்தில் நடந்தது. இதற்கு முறைப்படி அழைத்தும் கலந்துகொள்ளாமல் வேண்டுமென்றே புறக்கணித்துவிட்டார் எடப்பாடி என்று சொல்கின்றனர். எதிர்காலத்தில் எடப்பாடியும், சசிகலாவும் கைகோர்த்தால் தான் காணாமல் ஆக்கப்படுவோம் என்பது தான் அவரின் பயம் என்று சொல்கின்றனர். அதனால் தன் மகன் ரவீந்திரநாத்துக்கு மத்திய பா.ஜ.க. அமைச்சரவையில் ஒரு இடம் கிடைத்தாலே போதும், தான் கௌரவமாக ஒதுங்கிவிடலாம் என்பதுதான் அவர் கணக்கு என்று நெருங்கிய வட்டாரங்கள் கூறிவருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்