Skip to main content

நாங்குநேரி இடைத்தேர்தல் - ஸ்டாலினுடன் பேசி முடிவு... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

Published on 20/07/2019 | Edited on 20/07/2019

 

காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
 

அப்போது அவரிடம், அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பிரியங்கா காந்தி வந்தால் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு, நன்றாக இருக்கும், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் வரவேண்டும். இன்னும் சொல்லப்போனால் ஆலோசனை சொல்வதற்கு சோனியா காந்தியும் இருக்க வேண்டும் என்றார். 


  evks


தொடர்ந்து பேசிய அவர், வீட்டு வசதி வாரியத்தில் நடக்கின்ற குற்றச்சாட்டுக்களையெல்லாம் இனிமேல் அடுக்கடுக்காக புள்ளிவிவரத்தோடு ஆதாரத்தோடு வெளியிடுவோம் என்றார். 
 

நாங்குநேரி இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு, நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுமா? இல்லையா என்பது பற்றி காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் மேலிடத்தில் பேசி, ஸ்டாலினிடம் பேசி முடிவு செய்வார். இவ்வாறு கூறினார். 





 

சார்ந்த செய்திகள்