Skip to main content

நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ.க. வெளிநடப்பு - குமாரசாமி வெற்றி!

Published on 25/05/2018 | Edited on 25/05/2018

கர்நாடக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக முதல்வர் குமாரசாமி வெற்றிபெற்றுள்ளார்.
 

kumarasamy

 

இன்று கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பல்வேறு திருப்பங்களுக்குப் பின்னர் நடக்கும் வாக்கெடுப்பு இதுவென்பதால், இதுகுறித்து பேசிய குமாரசாமி, ‘எனக்கு எந்தவிதமான பயமும் இல்லை. நான் எந்தத் தடங்கலும் இன்றி சுலபமாக வெற்றிபெறுவேன்’ எனத் தெரிவித்திருந்தார். 
 

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக கர்நாடக சட்டசபைக்கான சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் சுரேஷ்குமார் திரும்பப்பெறப்பட்ட நிலையில், ம.த.ஜ. - காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே.ஆர்.ரமேஷ்குமார் சபாநாயகராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 

BJP

 

இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருந்த நிலையில், பா.ஜ.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்வதக அறிவித்தனர். விவசாயக் கடன்களை ரத்துசெய்யாவிட்டால் வரும் மே 28ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அறிவித்தனர். இதையடுத்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு சபாநாயகர் நீங்கலாக 116 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

“என் மீது வைத்த குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” - டி.கே.சிவக்குமார்

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

DK Sivakumar says I will quit politics if Kumaraswamy proves his allegations

 

கடந்த தீபாவளி தினத்தன்று பெங்களூரில் உள்ள கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் வீட்டில் மின் விளக்கு அலங்காரத்திற்கு மின்சாரம் திருடியதாகப் புகார்கள் எழுந்தன. இது குறித்து விசாரித்த மின்வாரிய அதிகாரிகள் அவர் மீது வழக்குப்பதிவு செய்து 68,000 ரூபாய் அபராதம் விதித்திருந்தது. இதனிடையே, ,வீட்டை வண்ண விளக்குகளால் அலங்கரிக்க, மின்சாரம் திருடப்பட்டதாக காங்கிரஸ் ஆதாரத்துடன் குற்றம் சாட்டியதோடு, போஸ்டர்கள் ஒட்டியதால் சர்ச்சை ஏற்பட்டது.

 

இந்த நிலையில்,குமாரசாமி நேற்று (21-11-23) போஸ்டர் விவகாரம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் போது, “கர்நாடகாவில் ஆபாச படங்களை திரையிட்டவரை தான் ஆட்சி அதிகாரத்தில் வைத்துள்ளனர். காங்கிரஸ் கட்சியும், இந்த மாதிரி ஆட்களிடம் தான் அதிகாரத்தை கொடுத்துள்ளது.  இது போன்ற படங்களை காட்டியவர் கட்சியின் தலைவராக இருந்தால் இப்படி தான் போஸ்டர்களை ஒட்டுவார்கள்” என விமர்சித்து குற்றம் சாட்டினார்.

 

குமாரசாமியின் விமர்சனத்துக்கு பதிலளித்து பேசிய துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், “குமாரசாமியை நினைத்து நான் வருத்தப்படுகிறேன். எனது தொகுதி கனகபுராவிற்கு சென்று நான் ஆபாச படங்களை திரையிட்டேனா? என்று மக்களிடம் கேட்டுப் பாருங்கள். அப்படி அங்கு யாராவது, நான் அந்த மாதிரி சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டிருக்கிறேன் என்று சொன்னாலோ அல்லது குமாரசாமி அவரது குற்றச்சாட்டுகளை நிரூபித்தாலோ நான் அரசியலை விட்டு விலகி விடுகிறேன். முன்னாள் முதல்வராக இருந்தவர் குமாரசாமி. அவரது தரத்திற்கு இப்படியெல்லாம் பேசுவது அவருக்கு தான் அவமானம்” என்று கூறினார். 

 

 

Next Story

71 யூனிட் திருட்டு; குமாரசாமிக்கு 68 ஆயிரம் ரூபாய் அபராதம்

Published on 18/11/2023 | Edited on 18/11/2023

 

 71 units of theft; Kumaraswamy was fined Rs 68,000

 

மின்சாரம் திருடிய குற்றத்திற்காக கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு 68 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது கர்நாடகா அரசு.

 

கடந்த தீபாவளி தினத்தன்று பெங்களூரில் உள்ள கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் வீட்டில் மின் விளக்கு அலங்காரத்திற்கு மின்சாரம் திருடியதாகப் புகார்கள் எழுந்தன. வீட்டை வண்ண விளக்குகளால் அலங்கரிக்க, மின்சாரம் திருடப்பட்டதாக காங்கிரஸ் ஆதாரத்துடன் குற்றம் சாட்டியதோடு, போஸ்டர்கள் ஒட்டி இருந்தது. இந்த விவகாரத்தை திசை திருப்பவே கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மகன் யதீந்திரா பேசும் வீடியோ காட்சிகளை சம்பந்தமின்றி பரப்பி வருவதாக குமாரசாமி மீது கர்நாடகா காங்கிரசினர் புகார் தெரிவித்து வந்தனர்.

 

இந்நிலையில் 71 யூனிட் மின்சாரம் திருடப்பட்டதாக புகார் கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது குமாரசாமிக்கு 68,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது பெங்களூர் மின்சார வாரியம்.