கடந்த சட்டமன்ற தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவோ வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மானியம் விலையில் ஸ்கூட்டர் வழங்கப்படும் என அறிவித்தார் அதுபோல் இபிஎஸ். ஒபிஎஸ் அரசு ஜெவின் 7oவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் ஸ்கூட்டர் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது .
அதுபோல் திண்டுக்கல்லில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் கலந்து கொண்டு முதல் கட்டமாக 144 பேருக்கு 25ஆயிரம் மானியம்விலையில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கினார் அதைதொடர்ந்து தாலிக்கு தங்கம்.தையல் மிஷின் உள்பட பல நல திட்டங்களை பெண்களுக்கு வழங்கினார். அதை தொடர்ந்து பேசிய அமைச்சர் சீனிவாசனோ.....கடந்த தேர்தலின் போது அம்மா சொன்ன வாக்குறுதியை தற்பொழுது இந்த எடப்பாடி பழனிச்சாமி அரசு ஒருவருடம் கழித்து நிறைவேற்றி வருகிறது.
இந்த மாவட்டத்திற்கு வருடத்திற்கு 3000ஆயிரம் பேருக்கு மானியவிலையில் ஸ்கூட்டர் கொடுக்க இருக்கிறோம் தற்பொழுது முதல்தவனையாக 144பேருக்கு கொடுத்து இருக்கிறோம் அதன்பின் படிபடியாக அனைத்து பெண்களுக்கும் வழங்கப்படும் அதுபோல் தாலிக்கு தங்கம். தையல் மிஷின் கொடுத்து இருக்கிறோம் ஏன் தையல்மிஷினை பெண்களுக்கு அம்மா கொடுத்து வந்தார்கள் என்றால் கனவன் குடிகாரன இருந்தால் அதை வைத்து பெண்கள் பிழைத்து கொள்ளட்டும் என்ற அடிப்படையில் அந்த திட்டத்தை அம்மா கொண்டு வந்ததை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம் அதற்காக நீங்க தான் டாஸ்மாக் கடை நடத்தி வருகிறோம் என்று கேட்டு விடாதீர்கள் டாஸ்மாக் கடைகளை நிறுத்தி விட்டோம் என்றுல் கள்ளசாராயம் பெருகும் அதன்மூலம் நெறையா பேர் செத்து போய்விடுவார்கள் அதுனாலதான் டாஸ்மாக் கடைகளை நடத்தி வருகிறோம் அதை முதலில் தாய்மார்கள் புரிந்து கொள்ளவேண்டும் அதுபொல் அவர்களை திருத்தி கொள்ள வைண்டுமே நாம திருத்தமுடியாது புரட்சித் தலைவர் பாடியது போல் திருடனா பார்த்து திருந்த வேண்டும் அவர் அவர் வாழ்க்கை அவர் கையில் இருக்கிறது என்று கூறினார். இந்த விழாவுக்கு எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. டாக்டர் பரமசிவம்.கலெக்டர் வினைய் உள்பட கட்சி பொருப்பாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பொது மக்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.