பொதுவாக வாரிசு அரசியல் என்பது இந்தியா முழுக்க உள்ள அரசியல் கட்சிகள் மீதான குற்றச்சாட்டுத்தான். தமிழகத்தில் முக்கியமாக திமுக மீதும், அதிமுக மீதும் அந்த குற்றச்சாட்டுக்கள் உள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த குற்றச்சாட்டை பிற கட்சிகள் மீது வைத்த பல தலைவர்களே தாங்களும் அதில் அங்கமானதுதான். நேற்று திமுக, அதிமுக என இரு கட்சிகளுமே தங்களது நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இந்த இரண்டு பட்டியலிலுமே வாரிசுகள் இடம்பெற்றிருக்கின்றனர்.
திமுகவில், வடசென்னையில் ஆற்காடு நா.வீராசாமி மகன் கலாநிதி வீராசாமி, தென்சென்னையில் முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய சென்னையில் முன்னாள் அமைச்சர் மகன் தயாநிதி மாறன், வேலூரில் முன்னாள் அமைச்சரும், திமுக பொருளாளருமான துரைமுருகன் மகன் டி.எம்.கதிர் ஆனந்த், கள்ளக்குறிச்சியில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கொளதம் சிகாமணி, தூத்துக்குடியில் கலைஞரின் மகள் கனிமொழி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அதிமுகவில், முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் மகன் மனோஜ் பாண்டியன், அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன், Jதுணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத், அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ்சத்யன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.