டிசம்பர் 2ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் கூறியிருந்தது. இதே எண்ணத்தில் தான் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் இருந்தார்கள். ஆனால், டிசம்பர் 13 வரை உச்சநீதிமன்றம் தங்களுக்கு அவகாசம் கொடுத்திருப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். இந்த நிலையில் பொங்கலுக்கு ஒன்றரை மாதம் இருக்கும் நிலையிலேயே, ரேசனில் அரிசி வாங்கும் கார்டு தாரர்களுக்குத் தலா ரூ1000 பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார் எடப்பாடி. பச்சரிசி, வெல்லம், முந்திரி உள்ளிட்ட பொருட்களுடன் ஆயிரம் ரூபாய் என்பது மக்களை நிச்சயம் அட்ராக்ட் பண்ணும் என்று ஆளுங்கட்சிக்குத் தெரியும் என்று கூறுகின்றனர்.
மேலும் தேர்தல் விதிகள் நடை முறைக்கு வருவதற்கு முன்பு பொங்கல் பரிசுத் தொகை பட்டுவாடா செய்து விட வேண்டும் என்ற திட்டத்தில் இருப்பதாகவும் கூறுகின்றனர். இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாகவே, இதைத் தொடங்கியதால் ஆணையத்தின் கெடுபிடி இல்லாமல் வாக்காளர்களுக்கு இந்த அன்பளிப்பை விநியோகிச்சிடலாம் என்கிற நினைப்பில் எடப்பாடித் தரப்பு இருப்பதாக கூறுகின்றனர். இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தினாலும், எத்தனை கட்டமாக தேர்தல் நடத்தினாலும் சிட்டியிலிருந்து கிராமம் வரை எல்லா ஏரியாவிலும் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு மேஜிக் அ.தி.மு.க.வை அமோகமாக ஜெயிக்க வைக்கும் என்று எடப்பாடி நம்புறதால், உள்ளாட்சித் தேர்தலுக்கு ரெடியானதா சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் வார்டு வரையறை குறித்து ஒரு வழக்கை கடந்த 28-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. தாக்கல் செய்துள்ளது.