சென்னை ஈக்காடுதாங்கல் இல்லத்தில் திவாகரனின் மகன் ஜெயானந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
சசிகலாவின் இன்ஷியலே அதிமுகதான். சசிகலாவின் இன்ஷியலை மாற்ற தினகரன் முயற்சி செய்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான நிலைப்பாட்டை நாங்கள் எடுக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் குறைகள் உள்ளன என்பதை மறுக்க முடியாது.
டிடிவி அணியில் இருந்து நாங்கள் விலகியதை முதல்வர் தங்களுக்கு சாதகமாக்கி கொண்டார். தினகரனின் செயல்பாடுதான் நாங்கள் வெளியேற காரணம். சசிகலா சிறைக்கு செல்லும்முன் எடப்பாடியை முதல் அமைச்சராக அமரவைத்து விட்டு சென்றுள்ளார். எல்லா எம்.எல்.ஏக்களிடமும் சத்தியம் வாங்கி உள்ளார். அவருக்கு எதிராக நாங்கள் எப்படி செயல்பட முடியும்.
வயதில் மூத்தவர்களுக்கு மரியாதை கொடுக்க தெரியாதவர் தினகரன். சசிகலா கொடுத்து விட்டுச்சென்ற அதிமுகவை தினகரன் காப்பாற்ற தவறி விட்டார். தினகரன் ஆதரவாளர்கள் எங்களிடம் திரும்பி வருவார்கள். நாங்கள் ஒற்றுமையாக இருந்தோம் தினகரன் தரப்பினர் எங்களிடையே பிரிவை ஏற்படுத்தினர். அ.தி.மு.கவில் இருக்கும் பலர் இன்னும் எங்களிடம் தொடர்பில் உள்ளார்கள்.
இணைந்து செயல்பட தாங்கள் தயாராக இருந்தும், தினகரன் அணியினர் பிரிந்து செயல்பட்டனர். ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டதில், தினகரனின் தூண்டுதல் இருக்கலாம். வயதில் மூத்தவருக்கு மரியாதை தராத தினகரன் நடிப்பின் மூலமே நல்ல தலைவர் என பெயரெடுத்துள்ளார் என உணர்ந்ததால் அவரிடம் இருந்து ஒதுங்கியதாக ஜெயானந்த் தெரிவித்துள்ளார்.