Published on 28/09/2020 | Edited on 28/09/2020

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் சில, நீட் தேர்வை மத்திய அரசு கைவிட வேண்டும். உலகத்தோடு உறவாட ஆங்கிலம், தாய் மொழி தமிழ் என இரு மொழிக் கொள்கையே அதிமுகவின் நிலைப்பாடு. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கண்டனம். அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவினர் அனைவரும் ஒன்றுகூடி உழைத்து ஆட்சி அமைப்பது. கலாச்சார ஆய்வில் தமிழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரை சேர்ப்பது. கரோனா பரவலைத் தமிழகம் குறைத்திருப்பதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, தமிழகத்திற்குத் தேவையான நிதியை வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.