17ஆவது மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்த நிலையில், மத்தியில் பாஜக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது.தமிழகத்தில் திமுக கூட்டணி 38 இடங்களில் வென்றுள்ளது. அதிருக்க அதிமுக கூட்டணியில் தேனி தொகுதி மட்டுமே வென்றுள்ளது.அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற பாமக,தேமுதிக ,பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதனால் அதிமுக கூட்டணி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.மேலும் தேர்தலுக்கு முன்பு பாமக கட்சிக்கு 7 நாடாளுமன்ற சீட்டும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் கொடுக்கப்பட்டது.இந்த நிலையில் பாமக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வி அடைந்துள்ளதால் அதிமுக கூட்டணி அதிர்ச்சியடைந்துள்ளது.
இந்தநிலையில், அதிமுக தலைமை நிர்வாகிகள், அதிமுக ஆட்சி நீடிக்க தேவையான வெற்றியை அதிமுக பெற்றுவிட்டது. கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற நாம் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டோம். ஆனால் கூட்டணிக் கட்சிகள் நமக்காக பேருக்குத்தான் வந்தார்களே தவிர, சொல்லும்படி பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. கடைசியாக நடந்த நான்கு தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் பிரச்சாரத்திற்கு வரவில்லை என்று பத்திரிகையில் விமர்சனம் வந்த பிறகு வந்தார்கள்.மேலும் பாமக ஒரு இடத்திலாவது வெற்றிப் பெற்றிருந்தால் அவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கியிருக்கலாம் இப்போது எப்படி என்று யோசித்து வருகிறார்களாம் அதிமுக நிர்வாகிகள்.
அதோடு,அதிமுக எம்பி மக்களவையில் ஒருவர்தான் இருக்கிறார். மாநிலங்களவையில் அதிமுக எம்பிக்கள் நமக்கு வேண்டும் என்பதால் கூட்டணிக் கட்சிகள் யாருக்கும் இந்த ராஜ்ய சபா சீட்டை வழங்கக்கூடாது என்றும், இதனால் பாமகவிற்கு ராஜ்ய சபா சீட் கிடைப்பது சந்தேகம் என்று பேசி வருகிறார்கள். இதனால் அதிமுக, பாமக கூட்டணியில் விரிசல் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.