Published on 08/01/2021 | Edited on 08/01/2021

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், மேற்கு வங்க சட்டப்பேரவையின் சிறப்பு அமர்வு, வருகின்ற ஜனவரி 27 ஆம் தேதி கூட இருக்கிறது.
இந்தச் சிறப்பு அமர்வில், மத்திய அரசின் புதிய வேளாண் சட்ட மசோதாக்கள், ஜி.எஸ்.டி ஆகியவை குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஏற்கனவே வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, டெல்லி, கேரளா, ராஜஸ்தான், பஞ்சாப், சட்டீஸ்கர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்கள் வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.