Skip to main content

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பதவியேற்பு

Published on 28/08/2017 | Edited on 28/08/2017
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பதவியேற்பு



இந்திய தலைமை நீதிமன்றத்தின் 45ஆவது தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பதவியேற்றார். 

குடியரசுத்தலைவர் மாளிகையில் உள்ள பதவியேற்பு மண்டபத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

தற்போதைய தலைமை நீதிபதி ஜேஎஸ் கேஹரின் பதவிக்காலம் முடிவதை தொடர்ந்து, 64 வயதான மிஸ்ரா புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார். 

இவர், 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி வரை பதவியில் இருப்பார். 

மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய யாகூப் மேமனுக்கு தூக்குத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தவர் மிஸ்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்