Skip to main content

ஐந்து சதவீத ஜி.எஸ்.டியுடன் கூடிய ஸ்புட்னிக் V தடுப்பூசியின் விலை அறிவிப்பு!

Published on 14/05/2021 | Edited on 14/05/2021

 

sputnik v

 

இந்தியாவில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி, இந்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி தொடங்கியது. இந்த தடுப்பூசி செலுத்தும் பணியில் இதுவரை கோவிஷீல்ட், கோவாக்சின் என்ற இரு தடுப்பூசிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்தநிலையில், சமீபத்தில் ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக் V தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசர கால அனுமதி வழங்கப்பட்டது.

 

இதனையடுத்து, ஸ்புட்னிக் V தடுப்பூசி இதுவரை இரண்டு கட்டங்களாக இந்தியா வந்துள்ளது. இந்த தடுப்பூசி அடுத்த வாரம் இந்தியா முழுவதும் கிடைக்கும் என மத்திய அரசு நேற்று (13.05.2021) அறிவித்தது. இந்தநிலையில், ஸ்புட்னிக் V தடுப்பூசி, இந்தியாவில் முதல்முறையாக ஹைதராபாத்தில் ஒருவருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதனை, ரஷ்யா நேரடி முதலீட்டு நிதியத்துடன் இணைந்து இந்தியாவில் ஸ்புட்னிக் தடுப்பூசியைத் தயாரிக்கும் டாக்டர் ரெட்டிஸ் லேபாரட்டரீஸ் மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

மேலும் டாக்டர் ரெட்டிஸ் லேபாரட்டரீஸ், ஸ்புட்னிக் V தடுப்பூசி இந்தியாவில் 995.40 ரூபாயில் கிடைக்கும் என தெரிவித்துள்ளது. ஒரு தடுப்பூசியின் விலை 948 என்றும், 5 சதவீத ஜி.எஸ்.டியோடு சேர்த்து தடுப்பூசியின் மொத்த விலை 995.40 என்றும் தெரிவித்துள்ள அந்நிறுவனம், இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து விற்பனைக்கு கொண்டு வருகையில், தடுப்பூசி விலை மேலும் குறையும் எனவும் கூறியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்