மும்பையில் ஓடும் ரயிலில் பாம்பு இருந்ததைக்கண்டு பயணிகள் பயந்து ஓடிய சம்பவம் நடந்துள்ளது.
மும்பை புறநகரான தானேவில் ஒரு மின்சார ரயிலில் எப்போதும் போல கூட்டம் அலைமதியது. அந்த கூட்டத்தில் மின்சார ரயிலில் உள்ள மின் விசிறியின் மேல்பகுதியில் ஒரு பாம்பு ஒன்று இருந்துள்ளது. முதலில் அதை கவனிக்காத பயணிகள் திடீரென பாம்பை பார்த்தவுடன் அலறினர். அந்த பாம்பு மெதுவாக பயணிகள் கை பிடிக்கும் கைப்பிடிகள் மீது நகரத்தொடங்கியது இதனால் மேலும் பீதியடைந்த பயணிகள் ஜெயினை பிடித்து ரயிலை நிறுத்தினர்.சிலர் இறங்கி ஓடினர்.
மேலும் ரயில்வே ஊழியர்களுக்கும், வனத்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது ஆனால் அவர்கள் வருவதற்குள் சில பயணிகலே ஒன்று சேர்ந்து அந்த பாம்பை பிடித்து வெளியேவிட்டனர். இதனால் சுமார் 15 நிமிடம் ரயில் பயணம் தாமதமானது. மேலும் ஓடும் ரயிலில் பாம்பு இருந்தது சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.