Published on 27/05/2019 | Edited on 27/05/2019
நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது. இந்நிலையில் காங்கிரஸின் தோல்வி குறித்தும் ராகுல் தலைமை குறித்தும் சிவசேனா கிண்டல் செய்துள்ளது.

ராகுல் காந்தியின் பேச்சுகள் மக்களை கவர்ந்திழுக்கும் வகையில் இல்லை. யாருக்கும் முன்மாதிரியாக இருக்கும் அளவு ராகுல் செயல்படவில்லை. காங்கிரஸ் கட்சி தொண்டர்களை இழந்து வருகிறது. கிழக்கு உத்தர பிரதேசத்தின் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தியை நியமித்த பிறகும் கூட காங்கிரஸ் பெரிய அளவில் சாதிக்கவில்லை. இங்கு எந்த மாற்றமும் ஏற்படவில்லை என சிவசேனா தெரிவித்துள்ளது. சிவசேனாவின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் தொண்டர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.